• May 20 2024

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய நடிகர்- வருந்தும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

அடுத்த மாதம் 3-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கின்றது.

அதன்படி சமீபத்தில் வெளியான அப்படத்தின் ட்ரைலரும் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்பை எகிற செய்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து நேர்காணலில் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி அவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸை தான் அணுகியதாக தெரிவித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அதன்பின் தான் விஜய் சேதுபதியிடம் சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாக ஏன் விஜய் சேதுபதி என்ற ஒரு எண்ணத்தால் தான் அவரை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதனை கேட்ட சில ரசிகர்கர்கள் அவரே நடித்திருக்கலாம் என வருந்துகிறார்களாம்.பலர் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என கூறுகிறார்களாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement