• Jan 19 2025

எல்லாமே பொய் பொய்.. நான் ஏர்போர்ட்டை பார்க்க தான் சென்றேன்! நீண்ட விளக்கம் கொடுத்த விக்கி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் சிறந்த ஜோடியாக வலம் வருகின்றார்கள். ஆனாலும் இவர்களைப் பற்றி ஏதாவது சர்ச்சை பேச்சுக்கள் தினமும் உலா வந்த வாறே உள்ளன.

சமீபத்தில் தனுஷ் விஷயத்தில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது . இதன் எதிரொலியால் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அரச ஹோட்டல் ஒன்றை விலை பேசியதாக விக்னேஷ் சிவன் கடும் விமர்சனத்துக்கு  உள்ளானார். மேலும் அரச சொத்தை விலைக்கு வாங்க முடியாது என்பது கூட விக்னேஷுக்கு தெரியாதா என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

d_i_a

இந்த நிலையில்,  நான் அரச ஹோட்டலை விலை பேசினேன் என்ற தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், புதுச்சேரி அரச ஹோட்டலை நான் விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக என்னைப் பற்றி ஒரு வதந்தி வலம் வருகின்றது. அதற்கு உண்டான பதில் இதுதான். 


நான் பாண்டிச்சேரியிற்கு சென்றது அங்கு உள்ள ஏர்போர்ட்டை பார்த்து நான் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திற்கு சூட்டிங் அனுமதி பெறத்தான். மரியாதையின் நிமித்தமாக தான் புதுச்சேரி முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.

ஆனால் எதிர்பார்க்காத விதமாக என்னுடன் வந்த லோக்கல் மேனேஜர் சில விஷயங்களை அவருக்காக கேட்டார். அந்த மீட்டிங்க்கு பிறகு அது என்னுடைய  தவறுதலாக இணைத்து புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் உருவான மீம்ஸ்களும் ஜோக்குகளும் உண்மையிலேயே நகைச்சுவையாகத்தான் இருந்தன.

குறித்த மீம்ஸ்கள் இன்ஸ்பயரிங் ஆக இருந்தாலும் அது அவசியமற்றது. இதைத்தான் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அனைவருக்கும் நன்றி.. என விக்னேஷ் சிவன் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்..

Advertisement

Advertisement