• Apr 15 2026

ரஹ்மானையே உருகவைத்த டியூன்... எது தெரியுமா.? வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்..

shali / 2 months ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், உலக அளவில் இசையின் பெருமையை உயர்த்தியவர். ஹாலிவுட் படங்கள் முதல் இந்தியா வரை, அவர் இசையமைத்த பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் மனதை அலற வைக்கும் திறனை கொண்டவை. ஏ.ஆர். ரஹ்மான், பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை வென்றவர் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், தமிழ் ரசிகர்களுக்காக அவர் தொடர்ந்து பிஸியாக பாடல்களை இசையமைத்துவருகிறார்.


இந்தப் பின்னணியில், சமீபத்தில் வெளியான ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ரஹ்மான் அங்கு தன்னுடைய ஒரு புதிய பாடல் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடல் உருவாக்கும் போது ஏற்பட்ட சவால்கள், அந்தப் பாடலுக்கு இசை அமைப்பதில் அவருக்கு ஏற்பட்ட உணர்வுகள் தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். 

ரஹ்மான் பேட்டியில், “‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலில் பல உணர்வுகளை சொல்ல வேண்டியது இருந்தது. அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அப்பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போது தான் அந்தப் பாடலுக்கான ட்யூன் எனக்கு சிக்கியது. அந்த ட்யூனை வாசித்த போது நான் அழுதுவிட்டேன். 

இதுதான் எதிர்பார்த்த ட்யூன் என்றும் உணர்ந்தேன். அந்தப் பாடலில் ‘டஃப்’ என்ற இசைக்கருவியை பயன்படுத்தியிருந்தோம். அது பழங்காலத்து கருவி. பெரிதாக யாரும் அதை பயன்படுத்தவில்லை. எனவே அந்தப் பாடலில் அதனை நாங்கள் அதிகமாக பயன்படுத்தினோம்.” என்று கூறியிருந்தார். 

இந்த பேட்டி வெளியானதும், ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வமுடன் பதிலளித்து வருகின்றனர். “இத்தரமான ட்யூன் கேட்டால் யாருக்குத் தான் அழுகை வராது!” என்றே பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement