• Mar 21 2025

நிச்சயதார்த்தத்தைக் குழப்ப இனியா எடுத்த திடீர் முடிவு...! ஷாக்கில் உறைந்த குடும்பம்!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி கோபிட்ட மாப்பிள வீட்ட இருந்து மொத்தமா 7பேர் வராங்கனு சொல்லுறாள். பிறகு இனியாவோட எதிர்காலம் நல்லா இருக்கனும் என்று தான் இந்த முடிவெடுத்தேன் என எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தமாச் சொல்லுறாள். பின் மாப்பிள வீட்டுக்காரர் வாற நேரத்தில எந்தக் குழப்படியும் யாரும் பண்ணக் கூடாது என்கிறாள். இதைக் கேட்டு பாக்கியா கோபம் கொள்ளுறாள்.

உடனே ஈஸ்வரிக்கு கிட்ட வந்து நான் அவளா சொல்லியும் நிச்சயத்தைச் செய்வேன் என்று சொன்னா என்ன அர்த்தம் என்று கேக்கிறாள். அதுக்கு ஈஸ்வரி இங்க உன் பேச்ச யாரும் மதிக்கல என்று அர்த்தம் என்கிறாள். இதைக் கேட்ட பாக்கியா என் பொண்ணு விஷயத்தில என் பேச்ச மதிச்சுத் தான் ஆகனும் என்று கோபமாச் சொல்லுறாள்.


பிறகு மாப்பிள வீட்டுக்கு கால் எடுத்து இந்த நிச்சயம் நடக்காதுனு சொல்லச் சொல்லுறாள். அதுக்கு ஈஸ்வரி கண்டிப்பா நான் அப்புடி சொல்லமாட்டேன் என்கிறாள். பின் பாக்கியா மாப்பிள வீட்டுக்காரங்க வந்தா நானே வெளியில போங்கனு சொல்லிடுவேன் என்கிறாள். இதைக் கேட்ட கோபி பாக்கியா நீ அம்மா கிட்ட பேசுறா பாத்து ஒழுங்காப் பேசு என்கிறான்.

அதைத் தொடர்ந்து பாக்கியா எத்தின நாளைக்குத் தான் செத்திருவன் என்று சொல்லி எல்லாரையும் பயமுறுத்துவீங்க என்று கேக்கிறாள். பிறகு கோபி கண்டிப்பா நிச்சயதார்த்தம் நடக்கும் என்று சொல்லுறான். அதுக்கு பாக்கியா எப்பிடி நடக்குதுனு நானும் பாக்கிறன் என்கிறாள். பின் இனியா பொலிஸுக்கு கால் எடுத்து என் விருப்பம் இல்லாமல் கலியாண முடிவெடுக்கிறார்கள் என்று சொல்லுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement