இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த கதையம்சத்துடன் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பை A. R. ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். மேலும், நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும், படப்பிடிப்பு இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ‘பெத்தி’ படத்தில் இடம்பெறும் ஒரு பிரம்மாண்ட சிறப்பு பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் பூஜா ஹெக்டே, மிருணாள்தகூர் மற்றும் ஆயிஷா கான் ஆகிய மூவரும் இணைந்து நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் ₹15 கோடி பட்ஜெட்டில் இந்த ஒரு பாடல் மட்டும் உருவாக்கப்படுவதாகவும், அதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த பாடலில் நடனமாடும் நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ‘பெத்தி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
Listen News!