• Mar 25 2026

இது வேறலெவல்! ரியோ ராஜ்ஜின் 'Maddy' படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் செய்த அந்த காரியம்..

shali / 3 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பயணம் செய்த ரியோ ராஜ் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் தற்போது தனக்கான இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக ‘ஜோ’ திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான ‘ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ரியோ ராஜின் மார்க்கெட்டை உயர்த்தியது.


இந்த வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது அவர் நடித்து வரும் புதிய படம் ‘Maddy’ ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் PK இயக்குகிறார். இவர் முன்பு லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Maddy’ திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக சான்யா ஐயப்பன் நடிக்கிறார். ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காட்சியளிக்கிறார்.


இப்படத்திற்கு இசையமைப்பை நினன் தாமஸ் மேற்கொள்கிறார். மேலும், சிவகார்த்திகேயன் தயாரித்த ‘தாய் கிழவி’ படத்தின் இணைத் தயாரிப்பாளரான கலை அரசு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், ‘Maddy’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தோடு, சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை தொடங்கி வைத்த வீடியோவும் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement