• May 20 2024

விருமன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும் இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.

கொம்பன் படம் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகி வருகின்றது.

எனினும் தற்போது விருமன் படத்தின் முதல் பாடல் கஞ்சா பூவு கண்ணழகி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்தப் பாடலின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தியும் அதிதியும் வெறித்தனமாக அதில் நடனம் ஆடியிருந்தனர்.தற்போது கஞ்சா பூவு கண்ணழகி முழு பாடல் மே 25-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கார்த்தி- யுவன் காம்போவில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் விருமன் பட ஆல்பத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.மேலும் விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement