கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.
பொதுவாக ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் என்றால் முன்பதிவு ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில் முதல் நாளுக்கான காட்சிகளின் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடும் என்பதும் அதன் பிறகு அடுத்தடுத்த நாள்களின் காட்சிகளுக்கு டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்படும் என்பதுதான் இதுவரை வழக்கமாக இருந்துள்ளது.
ஆனால் ’இந்தியன் 2’ திரைப்படம் முன்பதிவு நேற்று முன் தினம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் சென்னையில் பல தியேட்டர்களில் முதல் நாள் காட்சியே முன்பதிவு ஆகாமல் பல இடங்களில் பச்சையாக இருப்பதை பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை காட்சிக்கு கடந்த சில மாதங்களாக தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் முதல் காட்சி 9 மணி முதல் தான் தொடங்குகிறது. ஆனால் 10:30 மணி காட்சிகளின் டிக்கெட்டுக்களே இன்னும் முழுமையாக முன்பதிவு செய்யப்படாமல் பல சீட்டுகள் காலியாக இருப்பதை முன்பதிவில் பார்க்க முடிகிறது.
ஒரு சில திரையரங்குகளில் ஒரு சீட்டு கூட நிரம்பாத காட்சிகளும் உள்ளது என்பதால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறுமா என்ற அச்சம் படக்குழுவினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு நல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Listen News!