• Apr 27 2024

கிரிக்கெட், அரசியலை வைத்து ஐஸ்வர்யா சொன்ன மெசேஜ் என்ன? லால் சலாம் படத்தின் முழு விமர்சனம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளராக இயற்றிய திரைப்படம் தான் லால் சலாம். 

இதில் அவருடைய தந்தையான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதோடு மற்றும் பல முன்னணி நடிகர்கள், துணை நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

'லால் சலாம்' என்பது மத அரசிலை பற்றிய ஒரு சமூக விழிப்புணர்வு ஆகும். இது யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்ற செய்தியை தெரிவிப்பதில் ஐஸ்வர்யாராய் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக வாழும் கிராமத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் கிரிக்கெட் வீரர்களாக காணப்படுகிறார்கள். 

அந்த ஊரில் மொய்தின் பாயாக ரஜினிகாந்த் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.


இந்த படத்தில் ரஜினி மூலமாக 3 ஸ்டார் என்ற கிரிக்கெட் அணி ஆரம்பிக்கப்பட, விஷ்ணு விஷால் அதில் விளையாடி தொடர்ந்தும் வெற்றி பெறுகிறார். ஆனால் திடீரென்று ஒரு கட்டத்தில் அவர் அந்த அணியிலிருந்து வெளியேறி எம் சி சி என்ற வேறொரு அணிக்கு கேப்டன் ஆகிறார்.

இதன் காரணமாக எம் ஜே சி அணி தொடர்ந்து வெற்றி பெற ரஜினியின் 3 ஸ்டார் அணி தோல்வியை மட்டும் சந்திக்கிறது.

இவ்வாறான நிலையில் எப்படியாவது  3 ஸ்டார் அணியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பையில் உள்ள ரஜினி மகன் விக்ராந்தை அழைத்து வந்து விளையாட வைக்கின்றார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் ரஜினி மற்றும் அவரது மகன் விக்ராந்தின் கனவு. சிறு வயதிலிருந்து விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்திருக்கும் ஒத்துப் போகாத சூழ்நிலையில் இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் மோத நேரிடுகிறது.


இதில் அங்கு நடைபெறவிருக்கும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் அங்கு கலவரத்தை தூண்டுவதற்கு திட்டமிட்டு, கிரிக்கெட் போட்டி என்ற போர்வையில் விஷ்ணு விஷாலும் விக்ராந்துக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள்.

ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்தை தாக்க இது இறுதியில் முஸ்லிம் மக்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான பிரச்சனைக்கு வழி வகுக்கின்றது.

லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும், படம் முழுவதுமே அவரைச் சுற்றி நடப்பது போல் காட்டப்பட்டு, சில காமெடி காட்சிகளும் எமோஷன் காட்சிகளும் வழமை போல தான் காட்டப்படுகிறது.

எனினும், விக்ராந்திற்கும் ரஜினிக்கும் இடையில் இருக்கும் எமோஷனல் காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. 


இந்த படத்தில் ஐஸ்வர்யா, இந்து - முஸ்லிம் மதத்தை காட்டி இருப்பது பலத்திற்கு எதிர்ப்புகளை தேடி வரும் என்பதை பொருள்படுத்தாமல் தான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைத்தாரோ அதை சரியாக கொடுத்திருக்கிறார்.

மதத்தினால் ஆதாயம் தேடும் அரசியலும், அதனால் சீரழியும்  இளைஞர்களையும் எடுத்துக் காட்டி  படத்தை நகர்த்தி உள்ளார்

அது மட்டும் இல்லாமல் ஓர் திருவிழாவாக இருக்கட்டும், கடைசியில் அனைவரின் ரத்தத்தில் மதம் இல்லை என்ற மெசேஜ் ஆக இருக்கட்டும் அவற்றை அழகாக சொல்லி பாராட்டுகளை பெற்றுள்ளார் எனலாம்.

இந்த படத்தின் ஒரு சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும், படத்தின் ஒளிப்பதிவு மிகப் பலமாக அமைந்துள்ளது. ஏ ஆர் ரகுமான் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். 

தம்பி ராமையா, செந்தில் ஆகியோரது எமோஷனல் காட்சிகள் தமது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடியன்ஸை  அசத்தியுள்ளார்கள்.

அதிலும் திருவிழா என்பது சாமிக்காக நடத்தப்படுவதில்லை வெவ்வேறு திசைகளில் பிரிந்து வாழும் சொந்த பந்தங்களை ஒன்றாக திரட்டி மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் தான் திருவிழா என்று செந்தில் பேசும் வசனம் பார்ப்பவரை மெய் சிலிர்க்க  வைத்துள்ளது.

இவ்வாறு ஒரு அழுத்தமான கதையை ஆழமாகவும் நெற்றி பொட்டில் அடித்தாற் போன்றும் சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதேவேளை, மத நல்லிணக்கத்தை தெளிவாக சொல்லி இருக்கும் ஐஸ்வர்யா, சில இடங்களில் டல் அடிக்க வைத்துள்ளார். ஆரம்பத்தில் ரஜினியை பார்த்ததும் விசில் அடித்து ஆரவாரம் செய்த ரசிகர்கள், அதன்பின் எப்போது ரஜினி வருவார் என்பதுபோல காத்திருந்தது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement