• Mar 25 2026

குட் நைட் ஹீரோ மணிகண்டனின் Lover Movie... படம் எப்படி இருக்கு... திரைவிமர்சனம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மணிகண்டன் காலா, ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லவ்வர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் திரைவிமர்சனம் பார்ப்போம் வாங்க.


இப்படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும் லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.


இந்நிலையில், லவ்வர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். மணிகண்டன், கௌரி பிரியா இருவரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்கள். Possessive-வான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவி உள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.


அறிமுக இயக்குனர் பிரபு ராம் கதை சொன்ன விதம் சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம் லவ்வர். திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர்கிறது.


ஆனால், இரண்டாம் பாதி இன்னும் கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். காதலர் தினத்திற்கு ஏற்ற ஒரு திரைப்படம். படத்திற்கு மிகப்பெரிய பலத்தை ஷான் ரோல்டன் தனது இசையின் மூலம் சேர்கிறார். மிகவும் நெருக்கமான இளைஞர்களை கவரும் கதைக்களமாக அமைத்துள்ளது லவ்வர் திரைப்படம்





Advertisement

Advertisement