தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் இயக்கத்தில், அசோக் குமார், ராகினி திதேவி, மனோபாலா என்று பலர் நடித்துள்ள படம் தான் 'இமெயில்'.
எஸ்.ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரான இந்த படத்திற்கு, கவாஸ்கர் மற்றும் ஜிபி இசையமைத்து உள்ளார்கள்.
ஆன்லைன் விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்தே இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இதன் விமர்சனத்தை பார்ப்போம்.
நாயகன் அசோக் மற்றும் நாயகி ரோகினி திவேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நல்ல படியாக சென்ற இவர்கள் வாழ்வில் ஆன்லைன் கேம்மில் ஆர்வமுள்ளவராக ரோகினி காட்டப்படுகிறார்.
பின்பு அதன் மூலமாகவே ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் செல்வனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதனால் தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சினையை தீர்க்க நினைக்கும் ராகினி, அதை எப்படி செய்கிறார்? அந்த பிரச்சனை என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் இந்த இமெயில் படம்.
இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக், அவருக்கு குறைவான வாய்ப்புகள் படத்தில் கொடுக்கப்பட்ட போதிலும், அதில் சூப்பராக நடித்திருக்கிறார்.
நடிகையாக நடித்திருக்கும் ரோகிணியின் முகம் முதிர்ச்சியை காட்டினாலும், படத்தில் இளமையாகவே காட்டப்படுகிறது, காதல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளில் என்று அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
மனோ பாலாவின் காமெடி சிரிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைத்துள்ளார்.
எம் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக காட்டியுள்ளது. கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் மற்றும் ஜிபியின் பின்னணி இசை என்பன திரைக்கதைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை மையப்படுத்தி இந்த கதை சஸ்பென்ஸ் ஆகவும் யூகிக்க முடியாத பல திருப்பங்களுடன் சொல்லி இருக்கும் இயக்குனர், அதன் பாதிப்புகளை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் இந்த 'இமெயில்' ரசிகர்களை எச்சரிக்கவும் என்ஜாய் பண்ணவும் செய்துள்ளது.
Listen News!