• Jan 18 2025

அட அவருடைய கதையா இது... மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவாகும் எஸ்.கே.21... மனதை உருகும் எமோஷனல் கதைக்களம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே.21. முதல் முறையாக சிவகார்த்திகேயன், இப்படத்தின் மூலம் கமல் ஹாசனுடன் இணைந்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.மேலும் ஜி. வி. பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். 


இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார். அதற்காக தனது உடலை வருத்திக்கொண்டு சில விஷயங்களையும் செய்துள்ளார்.இன்று மாலை எஸ்.கே.21 படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்று வெளிவரவுள்ளதாக ராஜ் கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் நேரத்தில், படத்தை பற்றி சுவாரஸ்யமான அப்டேட் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.


இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்த முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார்களாம். இவர் 2006ல் இருந்து 2014ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சேவை செய்துள்ளார். தனது 31வது வயதில் ஜம்மு காஸ்மீரில் தனது உயிரை இந்திய நாட்டிற்காக தியாகம் செய்துள்ளார்.


மனதை உறைய வைக்கும் இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து எமோஷனல் கதைக்களத்தில் தான் எஸ்.கே.21 படத்தை எடுத்து வருகிறார்களாம். வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல், எஸ்.கே.21 முற்றிலுமாக மாறுபட்ட கதையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement