தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகள் எப்போதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘டிசி’ பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ், இந்த படத்தின் தயாரிப்பாளராக விளங்குகின்றது. சமீபத்தில் அவர்கள் ‘டிசி’ எனும் தலைப்பில் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தின் வருகையை அறிவித்திருந்தனர்.
‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். கதையில் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்திலேயே லோகேஷ் நடிப்பதாக தகவல்கள வெளியாகியுள்ளன. கதையின் மூல கதாபாத்திரத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் சந்திரா என்ற பாத்திரத்தில் வாமிகா கபி நடித்துள்ளார். அவரது நடிப்பு படத்திற்கு ஒரு புதுமையான appeal-ஐ வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், லோகேஷ் கனகராஜுடன் பேசுவது போல இருக்கும் காட்சியுடன் ‘டிசி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!