• Apr 15 2026

விஜயை விடாமல் துரத்தும் SK.. மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய "பராசக்தி" படக்குழு.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2026 தொடக்கம், திரையரங்குகளில் இரு பெரிய படங்களின் மோதல் சம்பவத்தை உருவாக்க இருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 


அத்துடன் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மற்றும் திரையரங்குகளில் வசூலை அள்ளிக்குவிக்கும் அடுத்த பெரிய படம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது வெளியாகிய தகவல்களின் படி, இந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய தகவல்களின் படி, ‘பராசக்தி’ படத்தை ஜனவரி 10ம் தேதி, ‘ஜனநாயகன்’ படத்திற்கு அடுத்த நாளில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்குக் காரணம் நேற்று விஜய் பொதுக் கூட்டத்தில் திமுக குறித்து பேசிய கருத்துகள் தான் எனக் கூறப்படுகிறது. அத்துடன், ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம், இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதால், ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement