பிரபல நடிகர் ரவி மோகன் தனது பிறந்த நாளன்று நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி இருந்தார். அதன் பின்பு ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமலேயே ரவி விவகாரத்து செய்ய முடிவை எடுத்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார்.
இவர்களுடைய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நேரத்தில் ஆர்த்தி, ரவி மோகன் பற்றி தொடர்ச்சியாகவே பல பதிவுகளை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரவி மோகன் தன்னுடைய நெருங்கிய தோழியான கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். அவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வருவதும், இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு செல்வதும் பல கேள்விகள் எழுவதற்கு காரணமாக அமைந்தது.

மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பியது. தற்போது ரவி மோகனும், கெனிஷாவும் நெருக்கமாக இருப்பது சினிமா வட்டத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. அவர்கள் இருவரும் தங்களுடைய உறவு பற்றி வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் டி. சிவா மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு ரவி மோகன் கெனிஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால் ஆர்த்தி தப்பே பண்ணி இருந்தாலும், விவாகரத்து கோரி இருந்தாலும், பசங்க தோளுக்கு மேல வளந்துட்டாங்க. இப்போ இது எல்லாம் தேவையா என ரவி மோகனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!