• Jan 18 2025

இத பார்த்தா ரசிகைகள் லைனுக்கு வரப்போறாங்களே..! துபாயில் கலக்கும் ஜெயம் ரவி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட நகைச்சுவை பாணியிலான வெற்றிப் படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் எம். ராஜேஷ்.

இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் பெரிதளவில் கவனத்தைப் பெற்றன. அவர் பேசிய வசனங்களில் நண்பேண்டா என்ற வசனம் இன்றளவில் மட்டும் நண்பர்களுக்கு இடையிலான பேச்சுக்களிடையே இடம்பெற தவறுவதில்லை.

தற்போது பிரபல நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

d_i_a

பிரதர் படத்தின் இறுதி கட்ட இசை கோர்ப்புகள் நடந்து வருவதாக சமீபத்தில் இயக்குனர் தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மது ஸ்ரீ குரலில் மிதக்கது காலு என்ற பாடல் வெளியாகி வைரலானது. அதேபோல இந்த படத்தில் மக்காமிஷி  என்ற பாடலும் மிகவும் வைரலானது.


இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக துபாய் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு ரொமான்டிக் ஹீரோ போல இருக்கும் அவரது புது ஸ்டைல் பலருக்கும் பிடித்துள்ளதோடு குறித்த புகைப்படங்களுக்கு தமது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றார்கள் ரசிகர்கள்.

மேலும் ஜெயம் ரவியின் புதிய ஸ்டைலை பார்த்தா பெண் ரசிகைகள் எல்லாம் லைனுக்கு வரப்போறாங்களே என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement