• Nov 06 2024

இப்டி சிரிச்சிங்கனா நான் என்னனு எடுத்துக்க.? ட்ராமா குயினை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சேது

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. வார இறுதி நாளான இன்றைய தினத்தை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இதனால் போட்டியாளர்கள் நடுநடுங்கி போய் உள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்து  இருப்பார்கள். 

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி சௌந்தர்யாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தரமான சம்பவம் ஒளிபரப்பாகியுள்ளது. தற்போது இது தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, இன்றைய நான்காவது ப்ரோமோவில், இந்த ஐந்து பேரும் தான் என்ன முடிவென்றாலும் எடுக்கின்றார்கள் என சௌந்தர்யா சக பெண் போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு விளக்கம் கொடுத்த ஜாக்குலின், சௌந்தர்யா எல்லா டாஸ்க்ளையும் உள்ள தான் இருக்காங்க என்று பதிலடி கொடுக்கிறார்.


இதைக் கேட்ட விஜய் சேதுபதி இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள் என சௌந்தர்யாவிடம் கேட்க, அது இந்த வாரம் கொடுத்தாங்க என்று சொல்லுகின்றார். அப்படி என்றால் இதற்கு ஏன் கம்ப்ளைன்ட் என்று என்று விஜய் சேதுபதி கேட்க, அடுத்து தனது குற்றச்சாட்டை அன்சிதா மீது முன்வைக்கின்றார்.

இறுதியில் தனது கேள்விக்கு சௌந்தர்யா பதில் சொல்லாமல் சிரித்ததை பார்த்த விஜய் சேதுபதி, இப்படி சிரிச்சிங்கனா நான் எப்படி எடுத்துக் கொள்வது எனக் கேட்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement