தமிழக அரசியல் களம் தற்போது தேர்தல் சூட்டில் குதூகலமாகியுள்ளது. வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள் என அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள அவர், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை குறிவைத்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

இந்நிலையில், இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆற்றிய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேடையேறிய அவர், தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அதாவது, “ஒண்ணு நீ... இல்லன்னா நான்... நம்மை தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது... நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தோம். விஜய் வந்ததால் நமக்கு தொல்லை. மக்கள் வேறு அவனைத் தான் நம்புகிறார்கள்.
அதனால், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்துவிடு. நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்னை கொடுக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார். இந்த உரை, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!