• May 05 2026

இசைப் புயலின் மாஜிக்கால் யூடியூபில் சாதனை படைத்த "பெத்தி" பட பாடல்.! இவ்வளவு வியூஸா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் இசை மற்றும் ஸ்டார் பவர் இணையும் போது உருவாகும் அதிரடி எதிர்பார்ப்புக்கு சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளது பெத்தி திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்.

‘மெகா பவர் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ராம் சரண் நடித்துள்ள இந்தப் படத்தின் 2வது சிங்கிள் பாடலான "ரை ரை ரா ரா..." வெளியான 24 மணி நேரத்திலேயே 46.1 மில்லியன் பார்வைகளை கடந்து தென்னிந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது.


நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட “ரை ரை ரா ரா” பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்கள் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் டிரெண்டாக ஆரம்பித்தது.

முக்கியமாக, வெளியிட்ட 24 மணி நேரத்தில் 46.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ள இந்த பாடல், தென்னிந்திய திரைப்பட பாடல்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருந்த சாதனைகளை முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்கள் இதை “ராம் சரண் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் மாஜிக்” என வர்ணித்து வருகின்றனர்.

பெத்தி திரைப்படம் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வருவதுடன், வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement