• Jan 19 2025

ஆண்ட்ரியா அப்பிடி இருப்பதால் ரொம்பவே பயமா இருந்திச்சு,வெற்றி மாறன் தான் காரணம்- ஓபனாகப் பேசிய இயக்குநர் அமீர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரை்படம் தான் வட சென்னை. தனுஷ் கதாநாயகனாக நடித்த .இப்படத்தில் ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது.

 இந்நிலையில், இப்படத்தில் ராஜன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த இயக்குநர் அமீர் பல சுவாரஸியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் வெற்றிமாறனுக்காக நான் வடசென்னை படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாலும், ஆண்ட்ரியா தான் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ஷாக்காகிவிட்டது. 


ஆண்ட்ரியா என்னைவிட ஹைட் அதிகம் என்றும், அப்படி இருக்கும் போது எப்படி நடிக்க முடியும்... இது செட் ஆகாது என வெற்றிமாறனிடம் கூறினாராம் அமீர். அதேபோல் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோரும் தன்னைவிட ஹைட் அதிகம் என அமீர் கூறியுள்ளார். 


ஆனால், வெற்றிமாறன் தான் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது தான் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது என அமீர் ஒரு பேட்டியில் கூறியது வைரலாகி வருகிறது. இதனை இயக்குநர் வெற்றிமாறனும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement