• Sep 20 2024

நான் ரயிலில் பாத்ரூம் அருகில் அமர்ந்து வந்தேன்- புதிய கார் வாங்கிய விஜய்டிவி நாஞ்சில் விஜயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிய காமெடி ஷோ தான் கலக்கப் போவது யாரு.

இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 9 சீசன்களைக் கடந்துள்ளது. தற்பொழுது கலக்கப் போவது யாரு சாம்பியன் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த காமெடி ஷோவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் நாஞ்சில் விஜயன். இவர் லேடி கெட்டப் போட்டு நடித்த அனைத்த சீசன்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது நாஞ்சில் விஜயன் புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் வீடியோவை அவர் இஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.

பெரிய கனவுடன் சென்னைக்கு வரும்போது நான் ரயிலில் பாத்ரூம் அருகில் அமர்ந்து வந்தேன். அது இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. தற்போது இப்படி வளர்ந்து இருப்பது எனக்கு கனவு நினைவானது போல இருக்கிறது. எதுவும் முடியாதது இல்லை. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை மக்களே" என அவர் கூறி இருக்கிறார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement