• May 08 2024

'டான் படத்தின் சில காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது'- நடிகர் சமுத்திரக்கனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகராக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படம் 13ம் திகதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளன என்பதோடு அனைவரையும் கவர்ந்து உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி இசைவெளியீட்டு விழாவில் பேசிய போது கூறியதாவது “இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது.

சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார்.

இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிரூத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனப் பேசினார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement