1971 ஆம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவயதிலேயே அறிமுகமானவர் நடிகர் பப்லு பிரித்விராஜ்.. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர், தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற பலமொழிகளிலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதன்பின் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தில் சாய் பல்லவிக்கு அப்பாவாக நடித்திருந்தார். கடைசியாக இந்த ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் ஹீரோயின் ருக்மினி வசந்துக்கு ஸ்டெப் ஃபாதராகவும் விஜய் சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.
தனக்கு எந்த கேரக்டர் கிடைத்தாலும் ஒதுக்காமல் அதில் சிறப்பாக நடித்து வருகின்றார். தற்போது பான் இந்திய நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், தனக்கு வாய்ப்பில்லாத கஷ்டமான காலத்தில் மாருதி, ராயல் கம்பெனிகளில் ஒரு நாள் மெக்கானிக்காக வேலை செஞ்சு இருக்கேன்.
ஒருவேளை நான் வாழ்க்கையில் மெக்கானிக்காகத்தான் ஆகிடுவேன் என்று பயந்துள்ளார் என்னுடைய அப்பா. இதனால் அந்த வேலைகளை செய்ய விடல என பிரித்திவிராஜ் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Listen News!