திரையுலகிலும், அரசியல் சூழலிலும் அசத்தி வரும் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜய் குறித்து நடிகை ரோஜா அண்மையில் வெளியிட்ட கருத்து தற்பொழுது வைரலாகி வருகிறது.

ரோஜா தனது பேட்டியில், "விஜய் TVK-ல மீட்டிங் நடத்தும் போது உண்மையாவே எனக்கு ரொம்ப ஷாக்கா இருக்கு. நாங்க Government-ல இருந்து CM-ஆ இருந்து ஒரு மாவட்டத்தில மீட்டிங் வைக்கணும்னா, அதற்காக எவ்வளோ பேர் வேலை செய்யணும் என எனக்கு நன்றாக தெரியும். Minister, MP, MLA, Collector இவர்கள் எல்லாரும் ஒத்துழைச்சால் தான் அது சாத்தியம். இவர்கள் யாரும் TVK-ல இல்ல. ஆனா, இவ்வளவு பெரிய விசயத்தை விஜய் எப்படி செய்தாருன்னு எனக்கு உண்மையா தெரியல." என்று கூறியிருந்தார்.
ரோஜா மேலும், "மக்கள் என்ன எதிர்பார்க்கிறாங்க என்று விஜய் தெரிஞ்சுக்கிட்டு மக்களுக்கு அதை கொடுக்கும் போது மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும்." எனவும் தெரிவித்துள்ளார்.

ரோஜாவின் பேட்டியிலிருந்து, விஜய் தனது அமைப்பில் எந்த விதமான சவாலையும் சாதாரணமாக கையாள்கிறார் என்பது வெளிப்படுகின்றது. இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!