• Feb 22 2025

மக்களுக்காக ஜெயிலுக்கு போகிறாரா விஜய்..? தளபதி 69 படத்தின் சூப்பர் அப்டேட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இளையதளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

கோட் திரைப்படத்தில் மைக் மோகன் வில்லனாக களம் இறங்கி இருந்தார். அவருடன் சினேகா, லைலா, பிரேம்ஜி, யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, வைபவ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். அத்துடன் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஏஐ டெக்னாலஜி மூலம் உயிரிழந்த விஜய்காந்தையும் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே காட்டி இருப்பார்கள்.

கோட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் இந்த படம் ரிலீசாகும் முன்பே லாபத்தை ஈட்டி கொடுத்ததாக இதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். மேலும் கோட் திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடிகளை கடந்து இருந்தது. இதை தொடர்ந்து இளைய தளபதி தனது 69ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார்.

d_i_a

விஜயின் 69 ஆவது படத்தை எஸ். வினோத் இயக்குகின்றார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரியாமணி, பிரகாஷ்ராஜ், மலையாள நடிகை மமீதா பைஜூ ஆகியோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.


மேலும் தளபதி விஜயின் 69வது திரைப்படம்  தெலுங்கு படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. அதாவது, நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பகவந்த் கேசரி என்ற படம் தான் தளபதியின் 69 ஆவது படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இந்த நிலையில்,  தளபதி 69 ஆவது படம் தொடர்பில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தளபதி ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. எனவே தளபதி 69 ஆவது திரைப்படம் ஜெயில் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுமா? அல்லது  விஜய்யின் அரசியல் பயணத்துக்காக மக்களுக்காக ஜெயிலுக்கு போனது போல எடுக்கப்படுமா? என ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement