• Mar 13 2025

அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிப்பதில்லை..! சித்தார்த் பேச்சு..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியன் 2 ,சித்தா ,miss you போன்ற படங்களில் நடித்த சித்தார்த் முன்னர் போல் அன்றி அண்மைக்காலங்களாக படவாய்ப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது.முன்னாவாக "பாய்ஸ் " படத்தில் அறிமுகமாகி பெண்கள் மனதை கொள்ளையடித்த இவர் தற்போது நடிகை அதிதி ராவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


சிம்பிளாக தனது காதல் மனைவியுடன் வலம் வரும் இவர் இந்தியன் 3,Siddharth 40 போன்ற படங்களில் காமிட்டாகியுள்ளார்.இந்நிலையில் தனது சினிமா பயணம் குறித்து ஊடகங்களிற்கு பேட்டியளித்துள்ளார் .இப் பேட்டியில் தனது மன எண்ணங்களை பகிர்ந்துள்ளார். 


இந்த நிலையில் பேட்டியின் போது அவர் "பெண்களின் இடுப்பை கிள்ளுவது. அடித்து கொடுமைப்படுத்துவது. பெண்களை கட்டுப்படுத்துவது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடப்பவன். அதை மீறும் வகையிலான வேடங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement