கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் நேற்றையோடு பிரம்மாண்டமாக நிறைவுக்கு வந்தது. இதில் முதலாவது இடத்தை முத்துக்குமரனும் இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும் பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில், முத்துக்குமரன் வெற்றி பெற்றது பற்றியும் சௌந்தர்யா பற்றியும் எமோஷனலாக பேசி கண் கலங்கியுள்ளார் ஜோ மைக்கேல். தற்போது இவர் வழங்கிய பேட்டி வைரலாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் எட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட முத்துக்குமரன் மிகச்சிறந்த பேச்சாளராகவும் தமிழ் பற்று உடையவராகவும் காணப்படுகின்றார். இவருக்கு ஆரம்பம் முதலே அமோக வரவேற்பு காணப்பட்டது. முத்துக்குமரன் தான் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் காணப்பட்டது.
இன்னொரு பக்கம் சௌந்தர்யா எந்தவித திறமைகளும் இல்லாமல் தனது கியூட்னஸ் மூலமே பிக்பாஸில் இறுதிவரை பயணித்ததாக பலரும் பல கருத்துக்களை கூறினார். இதனால் சௌந்தர்யா ஒரு முறை பிக்பாஸ் வீட்டில் மனம் நொந்து அழுதும் இருந்தார். ஆனால் அவருக்கு தைரியம் கொடுத்து ஐ லவ் யூ சொல்லி திடப்படுத்தினார் பிக்பாஸ்.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி பைனல் நடைபெற்ற போது அதில் முத்துக்குமரன் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார். இதன் போது பேசிய சௌந்தர்யா நான் கூட பயந்துவிட்டேன் எங்கே எனது கையை உயர்த்தி விடுவீர்களோ என்று, அப்படி நடந்திருந்தால் எனது அப்பாவே நேரடியாக வந்து முத்துவுக்கு டைட்டிலை வழங்கி இருப்பார் என்று கூறினார்.
மேலும் முத்துக்குமரன் பற்றி கூறுமாறு விஜய் சேதுபதி கேட்க, முத்துக்குமரன் யூ டீசெர்வ் என சௌந்தர்யா தெரிவித்திருந்தார். இதனாலையே ஜோ மைக்கல் தான் பேச நினைத்ததை சௌந்தர்யா பேசியிருப்பதாகவும், பலர் தன்னிடம் உங்க நண்பரை நீங்களே அமுக்குறீங்க என விமர்சனம் பண்ணுவார்கள்.
ஆனாலும் நான் அந்த பொண்ணே முத்து குமரன் தகுதியானவர் என சொல்லுவார் என தெரிவித்தேன். அதே போல பிக்பாஸ் மேடையில் சௌந்தர்யா முத்து பற்றி பேசியதும் நான் செத்துட்டேன்.. அவ்வளவு சந்தோஷம். நான் பேச நினைத்தை அவர் பேசி விட்டார். அது தான் சவுண்டு என ஜோ. மைக்கேல் கண்கலங்கி உள்ளார்.
Listen News!