தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் கார் பந்தய ஆர்வலர் அஜித் குமார், மலேசியாவில் நடைபெற்று வரும் Asian Le Mans Series (ALMS) கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், தனியார் ஊடகங்களுக்கு அஜித் அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி ரசிகர்களை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

அஜித் குமார் பேட்டியில், “ரசிகர்களை நான் மனதார நேசிக்கிறேன். எங்களுக்கு கிடைக்கும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன். இத்தனை தூரம் வந்து எங்களுக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்தி ஆதரவு அளிப்பது எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
Asian Le Mans Series என்பது, உலகின் முன்னணி racing நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் பங்கேற்பது, கார்பந்தய வீரர்களுக்கு தங்களுடைய ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகும்.
அஜித், இந்த ALMS போட்டியில் பங்கேற்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி, ரசிகர்கள் மற்றும் கார்பந்தய ஆர்வலர்களுக்கு மிகவும் உற்சாகமான அனுபவத்தை அளித்துள்ளது.
Listen News!