தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் இதற்கு முதல் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது இந்த படம் தான்.
இதைத்தொடர்ந்து காக்கா முட்டை படத்தில் ஹீரோ இல்லாமலேயே இரண்டு குழந்தைக்கு அம்மாவாக கதாநாயகிக்கு முக்கியம் கொடுத்த படத்தில் நடித்து அசத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அவருக்கு நல்ல அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது.
d_i_a
அதன் பின்பு தனக்கேற்ற வகையில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியம் கொடுக்கும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா. இவர் அதிகம் கவர்ச்சி காட்டாத நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், 34 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் திருமணம் செய்யவில்லை என்று மனம் திறந்து பேசி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், வயசு ஆகிட்டே இருக்கு.. கல்யாணம் பண்ணிக்கோ என்று அம்மா இரண்டு வருஷமா சொல்லிக்கிட்டே இருக்காங்க..
ஆனால் கல்யாணம் பண்ணினா வாழனும்.. நமக்கு டிவோஸ் செட் ஆகாது.. இப்போதுள்ள விவாகரத்துக்கு காரணம் இந்த தலைமுறையா இல்ல வேற என்னவா இருக்கும் என்று ஒரே குழப்பமா இருக்கு.. இவரை காதலிக்கலாம் கல்யாணம் பண்ணலாம் அப்படி ஒரு நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!