• Oct 08 2024

எனக்கும் ஆசை இருக்கு! உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு துஷாரா! நடிகர் தனுஷ் ஏக்கம்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

ராயன் படத்தில் தனக்கு தங்கையாக நடித்த துஷாரா விஜயனை பார்த்து பொறாமையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் கூட ரஜினி மீதான பாசம் அவருக்கு குறையவில்லை.


ரஜினி படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு செல்கிறார். தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த ராயன் படத்தில் அவரின் அன்பு தங்கையாக நடித்திருந்தார் துஷாரா விஜயன். தம்பிகள் துரோகம் செய்தபோதும் அண்ணனுக்கு ஆதரவாக கடைசிவரை இருந்தார் துஷாரா.


ராயன் படத்தில் நடித்தபோது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் நடித்து வந்தார் துஷாரா. வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் நடித்துவிட்டு ராயன் ஷூட்டிங்கிற்கு வந்த துஷாராவிடம் தனுஷ் சொன்ன விஷயம் வைரலாகிவிட்டது. 


ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்த துஷாராவை தனியாக அழைத்துச் சென்று தலைவரை பார்த்தியா, தலைவர் கூட நடிச்சியானு கேட்டிருக்கிறார் தனுஷ். அதற்கு துஷாரா ஆமாம் என்று சொல்ல, எனக்கு வாழ்க்கையில் யாரை பார்த்தும் பொறாமையாக இருந்தது இல்ல, இப்ப உன்னை பார்த்து பொறாமையாக இருக்கு என சொல்லியிருக்கிறார் தனுஷ் .தனுஷுக்கு தன் தலைவர் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது, ஒரு காட்சியிலாவத நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனுஷுக்கு.




Advertisement