• Jan 18 2025

எனக்கும் தவறான எண்ணம்.. நான் இறந்திருப்பேன்! அம்மா சொன்ன அந்த வார்த்தை! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்படியொரு வேதனையா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் அறியப்பட்ட நபராகவும், ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைக்கப்படும் நபராகவும் பிரபலமாக காணப்படும் பாடகர் தான் ஏஆர் ரகுமான்.

இவர் கோல்டன் கிளாக் விருதுகள் தொடக்கம் ஆஸ்கார் விருதுகள் வரை வாங்கி குவித்துள்ளார். தான் இசை அமைத்த முதலாவது படத்திலேயே தேசிய விருது முதல் ஆஸ்கார் விருதுவரை பெற்று புகழின் உச்சிக்கே சென்றவர் ஏ ஆர் ரகுமான்.


இவரது இசையமைப்பில் வெளியாகும் அத்தனை பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் வாழ்க்கையில் இடம்பெற்ற துயர சம்பவம் தொடர்பில் பேசிய விடயம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.


அதன்படி அவர் கூறுகையில், நான் ஏற்கனவே இறந்திருப்பேன். எனக்கும் ஒரு காலகட்டத்தில் தவறான எண்ணம் தோன்றி இருக்கிறது. இதன் போது, எனது அம்மா தான் என்னை தேற்றினார். நீ மற்றவருக்காக வாழும் போது அவ்வாறான தவறான எண்ணம் ஒருபோதும் தோன்றாது என கூறினார். 

உண்மையிலேயே, நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள். அது ஒருவருக்காக உணவு வாங்கிக் கொடுப்பதாக இருக்கலாம், ஒருவரை பார்த்து புன்னகைப்பதாக இருக்கலாம், அல்லது ஒருவருக்காக இசையமைப்பதாக கூட இருக்கலாம். இவ்வாறான விஷயங்கள் தான் நமது வாழ்க்கையுடன் நம்மை நீண்ட காலம் பயணிக்க வைக்கும் என மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement