1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் இந்தியன். இந்த படம் அந்த காலகட்டத்தில் பட்டையை கிளப்பியது.
தமிழில் இந்தியன் என்று வெளியான இந்த படம், தெலுங்கில் பாரதீயுடு என்ற பெயரில் வெளியானது. ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதாம்.
இந்த படத்தின் ஆரம்பத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதிலாக ஐஸ்வர்யா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனாலும் அவருடைய கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் மனுஷா நடித்துள்ளார்.
அதேபோல முதலில் ஊர்மிளா ரோலில் நடிப்பதற்கு மகேஷ் பாபு மனைவி நம்ருதி நடிக்க கமிட்டாக இருந்துள்ளார். ஆனாலும் அவர் சூட்டிங்கிற்கு ஒழுங்கா வராமல் இருந்த காரணத்தினால் அந்த ரோலில் சுகன்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தியன் படத்தில் நேதாஜி ஒரு பிளைட் விபத்தில் இறந்து விட்டதாக செய்திகள் வந்தது. ஆனாலும் அவர் உயிரோடு எங்கேயோ இருக்கிறார் என்றும் செய்திகள் பரவினது. அதுபோலத்தான் இந்த படத்திலும் கமலுக்கு விமான விபத்து நடந்தது. அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து எனக்கு சாவே கிடையாது என்று பேசுவார்.
இந்த படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக் பொறுப்பை கவனித்துள்ளார் வெங்கி. இவர் எத்தனையோ ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய போதும் இந்தியன் படம் தான் எனக்கு சவாலாக இருந்தது என்றும், அதிலும் கமல் அருகில் நேதாஜி இருப்பது போன்ற அந்த காட்சி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும் அப்போது கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியன் படத்தில் வரும் செல்போன் மணி போல் பாடலுக்கும் சில பீட் மியூசிக்குகளை ஹாலிவுட் படங்களில் இருந்து வாங்கித்தான் ஏ ஆர் ரகுமான் பயன்படுத்தினார் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!