• Jul 27 2024

ரஸ்யா முடிஞ்சு இனி அமெரிக்கா ! கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிலவரம்!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதி என அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய் ஆவார். பொதுவாகவே இவரது படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் இவர் நடிக்கும் கோட் படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


மங்காத்தா , மாநாடு போன்ற ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , பிரபுதேவா , பிரசாந்த் , மீனாட்சி சௌத்ரி , லைலா , சினேகா , திரிஷா என பல முன்னணி நடிகர்களும் நடிக்கும் திரைப்படம் கோட் ஆகும்.


குறித்த படத்தின் படப்பிடிப்புகலானது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கேரளாவில் இடம்பெற்று பின்பு ரஸ்யாவிலும் நடைபெற்றது. இந்த நிலையிலேயே இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகளானது அமெரிக்காவில் நடைபெற உள்ளதாகவும் விஜய் அமெரிக்காவுக்கு இன்று புறப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement