லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் மற்றும் கேமியா ரோலில் அமீர்கான் கூட நடித்திருப்பார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் வெளியான கூலி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றபோதும் முதல் நான்கு நாட்களில் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாளிலேயே கூலி திரைப்படம் 151 கோடிகளை வசூலித்து முதல் நாளிலேயே அதிகமாக வசூலித்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது.
நான்கு நாட்களின் முடிவில் 404 கோடிகளை வசூலித்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் கூலி 450 கோடிகளை கூட தாண்டவில்லை, அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் மௌனம் காக்கின்றது என்ற பேச்சும் அடிபட்டது.
மேலும் யூ| ஏ சான்றிதழை பெற்று மீண்டும் வசூல் வேட்டை நடத்துவதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி இருந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. கூலி திரைப்படம் வெளிமாநிலங்களிலும் டல் அடிக்க தொடங்கி விட்டதாம். இந்த படம் கேரளாவில் தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கூலி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 12 அல்லது 13-ம் தேதிகளில் அமேசன் பிரைமில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூலி படத்திற்கு போட்டியாக வெளியான வார் 2 திரைப்படமும் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பெரும் அடி வாங்கியுள்ளது.இந்த திரைப்படம் செப்டம்பரில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
Listen News!