• Aug 22 2025

திரைப்பட நடிகர் சரவணன் அமைத்துள்ள விநாயகர் கோயிவில்...! கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் கதாநாயகனாகத் தோன்றிய நடிகர் சரவணன், 'பருத்திவீரன்' திரைப்படம் மூலம் மறுபிரவேசம் செய்து மிகுந்த வரவேற்பை பெற்றார். அந்த வெற்றி பின்னணியில் அவர் “பருத்திவீரன் சரவணன்” என அறியப்பட்டார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடரில் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.


சினிமாவைத் தவிர ஆன்மீகத்திலும் ஈடுபாடும் கொண்டுள்ள சரவணன், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், வட்டக்காடு கிராமத்தில் தனது தோட்டத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு அழகிய ஆலயத்தை அமைத்துள்ளார். "அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோவிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 27.08.2025, காலை 9.30 முதல் 10.30 மணி வரையிலான சிறப்பான முஹூர்த்தத்தில் நடைபெற உள்ளது.

அதே நாளில், திரையுலகத்தில் தனது அடுத்த படியை ஏற்படுத்தும் வகையில், "சேலம் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி" எனும் புதிய ஸ்டுடியோவையும் திறந்து வைக்கிறார். இது படப்பிடிப்புக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன ஸ்டுடியோவாக இருக்கும்.


அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அமைக்கப்பட்ட ஆலயமும், திறக்கப்படவுள்ள ஸ்டுடியோவும் சரவணனின் பயணத்தில் முக்கியமான பயன்மிகு அடையாளங்களாக அமைந்துள்ளன.

Advertisement

Advertisement