• Aug 23 2025

கஜோலுக்கு 51 வயதுனா நம்புவாங்களா? ட்ரெண்டிங்கில் தீயாய் பரவும் வைரல் வீடியோ

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் தான் கஜோல். இவர்  ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில்  பிரபுதேவா நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடல் இன்று வரையும் அனைவரது பேவரைட் பாடலாக காணப்படுகிறது. 

இவர் பாலிவுட் ஸ்டார் ஆன அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்தார்.  இவர்களுக்கு 22 வயதில்  நைசா என்ற மகளும், 14 வயதில் மகன் ஒருவரும் உள்ளனர். இவர்களுடைய புகைப்படங்களும்  இணையதள பக்கங்களில் வைரலாகும். 


கடந்த சில மாதங்களாக ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்  கஜோலை  ஹிந்தியில் பேசுமாறும்  வலியுறுத்தினர். ஆனால் கஜோல் சிவந்த கண்களோடு எதற்காக ஹிந்தியில் பேச வேண்டும் என்று  மறுத்திருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், கஜோலுக்கு 51 வயது என்றால் யாரும் நம்ப முடியாத வகையில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் கருப்பு நிற உடை அணிந்து அழகில் மிளிர்கின்றார் கஜோல்.  தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி  வருகிறது. 



  

Advertisement

Advertisement