• Sep 15 2024

போஸ்டர் ஒட்டுவதை தவிர எல்லாமே அவர்தான்.. நவீன டி ராஜேந்தர் ஆகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, அதன் பின்னர் ஹீரோவாக நடித்தார் என்பதும் சில படங்களை இயக்கினார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் மற்றும் ஹீரோ என கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் அவரே ஏற்று ஒரு படத்தை உருவாக்க இருக்கும் நிலையில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கி தயாரிக்கும் திரைப்படம் ’கடைசி உலக போர்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 80களில் டி ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், தயாரிப்பு ,இயக்கம், ஹீரோ என கிட்டத்தட்ட அனைத்து பொறுப்புகளையும் ஒரு படத்தில் ஏற்று இருப்பார். அதேபோல் நவீன டி ராஜேந்தராக ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளதாகவும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் புரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ஒரு சிலர் போஸ்டர் ஒட்டுவதை தவிர இந்த படத்தில் எல்லாமே ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் என்று கலாய்த்தும் வருகின்றனர். ஒரு திரைப்படம் என்றால் பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சி ஆக இருக்க வேண்டும் என்றும் ஒரு படத்தில் உள்ள அனைத்து முக்கிய பொறுப்புகளையும் ஒரே நபர் எடுத்துக் கொள்கிறார் என்றால் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வயதுக்கு சரியாக வருமா என்பதை அவர் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிலர் அறிவுரை இது வருகின்றனர்.



Advertisement

Advertisement