• Aug 31 2024

தேவிஸ்ரீ பிரசாத் ஆரம்பித்து வைக்கும் ஃபயர்.. ‘கங்குவா’ அறிவிப்பால் குஷியில் சூர்யா ரசிகர்கள்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த விளம்பர பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கிராபிக்ஸ் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா உள்பட அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய படக்குழுவினர் தயாராகியுள்ள நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி ’ஃபயர்’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த பாடல் நிஜமாகவே ஃபயராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement