தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தற்போது தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய், அரசியலில் நுழைந்தது முதல் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதன்படி, அரசியல் சார்பில் மட்டுமின்றி சினிமா துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் விஜயை சூழ்ந்தன. அதில் குறிப்பாக, அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக வெளியான தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி, தனது கணவருக்கும் நடிகை ஒருவருக்கும் தவறான உறவு இருப்பதாக சங்கீதா கூறியதாக வெளியான தகவல்கள் மேலும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன.
அதன்படி அந்த நடிகை த்ரிஷாதான் என சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. அந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜயும் த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் பிரபல ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டது மேலும் பல விமர்சனங்கள் எழ காரணமானது.

விஜய் — த்ரிஷா கூட்டணி தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் ஜோடியாகும். 2004ல் ‘கில்லி’ படத்தின் மூலம் முதன்முதலாக இணைந்த இவர்கள், ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ போன்ற படங்களில் நடித்துள்ளனர். 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2023ல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ படத்தில் மீண்டும் இணைந்தனர்.
இந்த நிலையில், பழைய பேட்டியில் விஜயைப் பற்றி த்ரிஷா மிகவும் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறுகையில் , “விஜய் என்னுடைய வாழ்வில் எப்போதும் ஸ்பெஷலானவர். அவருடன் தான் எனது மிகப்பெரிய ஹிட் படங்கள் வந்தன. அவர் மிகவும் அன்பானவர், கண்ணியமானவர். செட்டில் எப்போதும் புரொஃபஷனலாக இருப்பார். அவர் கோபப்படுவதை பார்த்ததே இல்லை. அவர் எப்போதும் என் நினைவில் இருப்பவர்களில் ஒருவர்” என்று தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில், விவாகரத்து சர்ச்சையில் விஜய் மறைமுகமாக பதிலளித்திருந்தாலும், த்ரிஷா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!