• Jan 19 2025

கைநழுவிப்போன கவர்மென்ட் கான்ராக்ட் - பேரதிர்ச்சியில் பாக்கியா! ராதிகாவுடன் கைகோர்த்த இனியா! பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுவது பாக்கியலட்சுமி சீரியல். தற்போது இன்றைய தினம் வெளியான எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

பாக்கியாவும் இனியாவும் ரூமில் இருந்து பேசிக் கொண்டு இருக்கும் போது, நாளைக்கு என் ஸ்கூல்ல பங்க்ஷன் ஒன்று இருக்கு அதுக்கு போட்டு போறதுக்கு புது உடுப்பு வேணும் எடுத்து தாரியா அம்மா என கேக்க, சரி என ஒத்துக் கொள்கிறார் பாக்கியா.மேலும் நாளைக்கு விடிய சின்ன வேல இருக்கு அது முடிய போய் வாங்குவம் என சொல்கிறார்.


மறுபக்கம், கவர்மென்ட் கான்ராக்ட் எடுப்பதற்காக கொஞ்ச கொஞ்சமாக பணத்தை சேர்க்கிறார் பாக்கியா. இது வரை சேர்த்த காசு 18,000 இருக்க, மேலும் மிஷன் விற்ற காசு என 40 ஆயிரத்தை செல்வி கொடுக்க, வீட்டு காசு என பாக்கியாவின் மாமாவும் 40 ஆயிரத்தை கொண்டு வந்து கொடுக்கிறார்.

இப்படி ஒருவழியாக பணத்தை சேர்த்து கவர்மென்ட் கான்ராக்ட் எடுப்பதற்காக கிளம்புகிறார்கள் எழிலும், பாக்கியாவும்.அந்த நேரத்தில் பணத்த தொலைச்சிடுவியோ என பயமா இருக்கு என ஈஸ்வரி சொல்ல, அப்படி ஒன்றும் நடக்காது என சொல்லி கிளம்புகிறார் பாக்கியா. அதன்படி ஆபிஸிற்கு சென்று பணத்தை கட்டிவிட்டு கான்ராக்ட் கையில் கிடைப்பதற்காக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மறுபக்கம், புது உடுப்பு எடுப்பதற்காக இனியா பாக்கியாவை பார்த்துக் கொண்டு இருக்கிறார். எனினும் லேட்டாக வீட்டில் தாத்தா, பாட்டியை அழைக்கிறார் எனினும் அவர்கள் உன் கூட வர முடியுமா? நீ மணி கணக்கா எடுப்பா என சொல்லி மறுக்கிறார்கள். அந்த நேரத்தில் ராதிகா வந்து நான் குட்டி போறன் என்று சொல்லவும், நான் அம்மா கூட போறன், இல்ல பழைய உடுப்ப போட்டு போறன் என்று சொல்கிறார். எனினும், இறுதியாக ஈஸ்வரியும் ஓகே போய்ட்டு வா என சொல்ல ராதிகாவுடன் கிளம்பி செல்கிறார் இனியா.


இதை தொடர்ந்து, கான்ராக்ட் எடுக்க வந்தவர்களை அழைக்க அங்கு பாக்கியாவுடன் நிறைய பேர் வந்து நிற்கிறார்கள். இதை பார்த்து சற்று யோசனையில் இருக்கிறார்கள். அதன்பின் அந்த கான்ராக்ட் எடுக்க 46 பேர் வந்த நிலையில் அது குழுக்கள் முறையில் கொடுப்பதாக ஒரு ஷாக் கொடுக்கின்றனர். அதை கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருக்கிறார் பாக்கியா.

இந்த நிலையில், குழுக்கள் முறையில் தேர்ந்து எடுத்தலில் அது வேற ஒருவருக்கே கிடைக்கின்றது. இதை தொடர்ந்து கட்டின பணம் தருவீங்களா என கேக்க, ஒரு மாசத்துக்கு உள்ள தருவோம் என சொல்கின்றனர். இவ்வாறு இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Advertisement

Advertisement