• Dec 02 2024

கவர்ச்சியாக மட்டும் தான் நடிப்பேன் நடிகை காஜல்... க்ளெமர் உடையில் ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படம் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆன பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். அத்தோடு அவரின் அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.  


திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்காவிட்டாலும் சில படங்களை தெரிவு செய்து நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  தற்போது ஒரு ஸ்பெஷல் பாடலுக்காக 'புஷ்பா 2' குழு காஜலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த செய்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


சமீபத்தில் ஒரு இயக்குனர் பெண்ணை மையப்படுத்திய கதையுடன் காஜலை அணுகியுள்ளார். ஆனால் அவர் தான் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தை விரும்புவதாகக் கூறி அந்த கதையை மறுத்தார். ஆகையால் புஷ்பா படத்தில் நடனமாட படக்குழு அவரை அணுகினால், காஜல் கிரீன் சிக்னல் தருவார் போலத்தான் தெரிகிறது.


பிரசவத்திற்கு பிறகு சினிமாவுக்காக அவர் உடல் எடையை மீண்டும் குறைத்து இருக்கிறார். தற்போது காஜல் கிளாமர் உடையில் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தை ஆக்ரமித்து இருக்கிறது. 

இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement

Advertisement