• Jan 18 2025

சிவாங்கி குரலில் ஒலித்த தேவரா பாடல்... அடடே டான்ஸும் ஆடுறாங்களா? வைரல் வீடியோ இதோ..,

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

சமீபத்தி ரிலீசான தேவரா திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான சுட்டமெல்லே பாடல் பட்டி தொட்டி எங்கும் பார்க்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


முதல் பாடலான 'ஃப்யூரி' வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 'தேவரா' படத்தின் இரண்டாவது பாடலான 'சட்டமெல்லே". இந்த புதிய டிராக் மெதுவான, அதிக காதல் பக்கத்தைக் காட்டுகிறது. இது முதல் தனிப்பாடலின் தீவிரத்திற்கு மாறுபாட்டை வழங்குகிறது. ஷில்பா ராவ் மற்றும் அனிருத் பாடிய இந்த பாடல் விரைவில் பிரபலமடைந்தது, ரசிகர்கள் காதல் மற்றும் இனிமையான மெல்லிசையைப் பாராட்டினர்.


இந்த பாடலுக்கு அனைவரும் ரீல்,டிஃடோக் செய்து வைரலாகி வரும் நிலையில் தற்போது இந்த பாடலுக்கு பாடகி சிவாங்கி தனது குரலில் பாடி அசத்தியதோடு அதற்கு நடனமும் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ... 

Advertisement

Advertisement