தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் குமார், தனது தனித்துவமான நடிப்பு, எளிமையான வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களில் கொண்ட உறுதியான அணுகுமுறையால் ரசிகர்களிடையே சிறப்பான இடத்தைப் பெற்று வருகிறார்.

சினிமாவைத் தாண்டி, தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கார் ரேஸிங் விளையாட்டில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித், தற்போது அந்தத் துறையில் இந்தியாவின் பெருமையை உலக நாடுகளில் உயர்த்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் குமார், சினிமா படப்பிடிப்புகளை விட தனது கார் ரேஸிங்கில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான கார் ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று, தன்னுடைய திறமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அஜித் குமார் பங்கேற்கும் ஒவ்வொரு கார் ரேஸிங் போட்டியும், இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான இடங்களைப் பிடித்து, இந்திய தேசியக் கொடியை உயர்த்திய தருணங்கள், ரசிகர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்திருந்தது.
இந்த நிலையில், அஜித் குமாரின் கார் ரேசிங் பயணத்தை முழுமையாக பதிவு செய்யும் வகையில், பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப்படம், அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை, அவரது மனநிலை, சவால்கள், வெற்றிகள் மற்றும் ரேஸிங் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் ஆழமாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்பொழுது, இந்த ஆவணப்படத்திற்கான டீசர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. டீசர் வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The journey of #AjithKumar on the track. pic.twitter.com/NPS00f75jb
Listen News!