• Dec 29 2025

மதுரையில் சிம்பு கொடுத்த அதிரடி என்ட்ரி... மகிழ்ச்சியில் கத்திக் கூச்சலிடும் ரசிகர்கள்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சிலம்பரசன் (சிம்பு), தனித்துவமான நடிப்பு, கவர்ச்சியான தோற்றம் மற்றும் ரசிகர்களுடன் கொண்ட நெருக்கமான உறவு என்பவற்றால் அறியப்படுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி வருகிறார்.


சிம்பு – வெற்றிமாறன் இணையும் இந்த புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக சிந்தனை மற்றும் உணர்வுபூர்வமான கதை சொல்லும் இயக்குநராக பெயர் பெற்ற வெற்றிமாறன், இந்தப் படத்திலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சிம்புவை நேரில் பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடிவிடுகின்றனர். 

சமீபத்தில், ‘அரசன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள், சிம்புவின் தீவிரமான நடிப்பு, வெற்றிமாறனின் இயக்க பாணி உள்ளிட்ட பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.


இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறனுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை கொடுத்த அனுபவம் கொண்ட தாணு, ‘அரசன்’ படத்தின் தரத்திலும் எந்த சமரசமும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.


இந்த நிலையில், நடிகர் சிம்பு மதுரையில் ரசிகர்கள் சந்திப்பை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு தனது ரசிகர்களை நேரில் சந்தித்ததால், இந்த நிகழ்ச்சி அவர்களுக்குப் பெரும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது. இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement