திருச்சூர் மக்களவை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தற்போது மத்திய அமைச்சராக உள்ள நடிகர் சுரேஷ் கோபி மீது தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள காங்கிரஸ் நிர்வாகி டி.என். பிரதாபன் அளித்துள்ள புகாரில், திருவனந்தபுரத்தில் வசிக்கும் சுரேஷ் கோபி, தவறான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து தனது வாக்காளர் பட்டியலை திருச்சூருக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளை முற்றாக மீறும் செயலாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக வாக்காளர் பட்டியலில் இடமாற்றம் செய்ய, நிபந்தனைப்படி உரிய முகவரி, இருப்பிடம் மற்றும் ஆவணங்கள் தேவைப்படும். ஆனால், சுரேஷ் கோபி தாக்கல் செய்த ஆவணங்கள் தவறானவை என்றும், இதன் மூலம் தேர்தலில் பங்கேற்க தகுதி இல்லாத நிலையில் அவர் வேட்பாளராக நின்றதாக பிரதாபன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் சுரேஷ் கோபியை பதவியிலிருந்து விலகக் கோரி குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.
Listen News!