• Jan 18 2025

தளபதி 69 திரைப்படத்தின் NEW UPDATE இதோ... பிரபல இயக்குனர் கதையை 2 முறை நிராகரித்த தளபதி விஜய்... 69 இயக்குனர் யார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். ஒரே முறையல்ல, இரண்டு முறை நடிகர் விஜய்க்கு இவர் கதை கூறியுள்ளாராம்.  ஆனால் அவர் நிராகரித்து விட்டார் என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். ஏன் அப்படி செய்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. 


நடிகர் விஜய் தனது நடிப்பில் பல வெற்றி படங்களை நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் , நெல்சன், வெங்கட் பிரபு என பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் தற்போது முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் கூறிய கதையைத்தான் அவர் நிராகரித்து இருக்கிறார்.


இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இரண்டு முறை நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து கதை கூறியிருக்கிறார். ஆனால், எதோ ஒன்று சரியில்லை என்ற காரணத்தினால் இருவரும் இதுவரை இணையாமல் இருந்துள்ளனர்.


இந்த கம்போ எப்போது இணையும் என்று ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.


தளபதி 68 படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. 

இந்நிலையில், தளபதி விஜய் , சன் பிச்சர்ஸ் ,கார்த்திக் சுப்ராஜ் கூட்டணியில் தளபதி 69 திரைப்படம் உருவாகவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கூடிய சீக்கிரம் கிடைக்கும். 

Advertisement

Advertisement