சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தாரா, பகத் பாஸில் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.
புஷ்பா படத்தின் முதலாவது பாகம் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வெளியானது.
இந்த மூன்று வருடங்களிலும் அல்லு அர்ஜுன் வேற எந்த படங்களிலும் நடிக்காமல் புஷ்பா 2 படத்திலேயே தனது முழு உழைப்பையும் கொட்டினார். அதற்கு ஏற்ற பலனாகவே தற்போது இந்த படம் வசூலில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் இதுவரையில் 1760 கோடிகளை மொத்தமாக வசூலித்து இருப்பதாக அதிகார்வ பூர்வமாகவே தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் கடந்தால் இந்த படம் 2000 கோடிகளை வசூலிக்கும் என்று நம்பப்படுகின்றது.
இதேவேளை தமிழில் வெளியான கங்குவா திரைப்படம் 2000 கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் தோல்வியடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!