• Mar 25 2026

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ.!

shali / 17 hours ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி இணைந்து உருவாக்கி வரும் புதிய திரைப்படம் ‘நூறு சாமி’ தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விஜய் ஆண்டனி, இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் திரைக்கு வர உள்ளார்.


இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

‘நூறு சாமி’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த நட்சத்திர பட்டாளம், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘மாய கனவோ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாடல் வெளியீடு குறித்து வெளியான போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், இந்த திரைப்படம் மே 1 ஆம் தேதி, உழைப்பாளர் தினம் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Advertisement

Advertisement