• Apr 15 2026

தந்தையை இழந்த வலியிலும் மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் இந்திரஜா.!குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் வழியாக உயர்ந்து, அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் ரோபோ சங்கர். 

சமீபத்தில் உடல்நலக் கோளாறுகளால் மிகவும் மெலிந்து காணப்பட்ட இவர், கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ரோபோ சங்கரின் மகளும் பிரபல நடிகையுமான இந்திரஜா, தனது தாய்மாமாவான கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.


இந்நிலையில், நடிகை இந்திரஜா தனது இரண்டாவது திருமண ஆண்டை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தந்தையை இழந்த வலியிலும் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடும் இந்திரஜாவுக்கு திரையுலகம் முழுவதும் அன்பான வாழ்த்துக்களை பொழிந்து வருகிறது.

Advertisement

Advertisement