• Jan 18 2025

விவசாயி போல நடிக்கிறது ரொம்ப கஷ்டம்... அவங்க எல்லாம் கடவுள்... நடிகை திவ்யபாரதி கருத்து... நடிகர் சேரன் ஷேர் செய்த வீடியோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

journey வெப்சீரிஸ்ஸில் நடித்தபோது திவ்யபாரதிக்கு கிடைத்த அனுபவம் என அவர் பகிர்ந்த போது அவர் கூறிய வார்த்தைகளால் நான் மெய்மறந்து நின்றேன் என நடிகர் சேரன் ஒரு விடீயோவை ஷேர் செய்துள்ளார்.


இயக்குனர் சேரன் "ஜர்னி" என்ற வலைத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். R. சரத் குமார், பிரசன்னா, ஆரி அருஜுனன், கலையரசன் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் அடங்கிய பலதரப்பட்ட நடிகர்களை கொண்டு அமைக்கபட்ட இந்த கதையில் நடித்த அனுபவம் தொடர்பாக நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.


விவசாயியா நடிக்கிறது கஷ்டம் தான் நானாவது நடிச்சேன். சூட் டைம் கூட கத்தரி, வெண்டி பறிச்சிட்டு இருப்போம். வெண்டிகாய் பறிக்கும் போது கையிலப்பட்டா அரிக்கும், நான் சேருல நடக்கவே யோசிச்சேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அவங்க இப்படித்தான் கஷ்ட்டபடுறாங்க உண்மைக்கும் விவசாயிகளை கடவுளுக்கு சமமா வச்சுதான் பார்க்கணும். 


எவ்வளோ கஷ்ட பட்டம் கொரோனா, புயல் மழை என்று அப்போதெல்லாம் விவசாயிகள் சரி என்று வீட்டில் இருந்து இருந்தா நமக்கு சாப்பாடு கிடைச்சி இருக்காது. அங்க 10,15 நாள் சூட் பண்ணும் போது தான் அவங்க கஷ்டம் புரிந்தது. அவங்க நல்ல ஹாப்பியா தான் வேலை செய்றாங்க. இப்படி ஒரு முக்கியமான ஒரு ரோல்ல நான் நடிக்கிறது ஹாப்பியா இருந்தது.  


Advertisement

Advertisement